பேருந்தில் மாயமான 1.50 லட்சம் பணம்.. கதறும் மூதாட்டி..!1.50 lakh money disappeared in the bus.. Screaming old lady..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளையில் முத்துசாமி தனது மனைவி மெரினாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மெரினா வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1.50 லட்சம் மற்றும் 2கிராம் கம்மல் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து கொண்டு புறப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மெரினா வங்கிக்கு செல்வதற்காக பணப் பையுடன் திசையன்விளை செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் மெரினா பேருந்தை விட்டு கீழே இறங்கியதும் பையில் இருந்த பணம் மற்றும் நகை காணாமல் போய் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மெரினா பயணம் செய்த பேருந்தில் கூட்ட நெரிசில் அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

money

இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் மெரினா கைப்பையிலிருந்த பணம் மற்றும் நகையை திருடியுள்ளனர். இதனையடுத்து மெரினா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.