AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
15 வயது மாணவி கர்ப்பம்... சென்னை வாலிபருக்கு தலைமறைவு.!!
திருப்பூரில் 15 வயது சிறுமியை பாலியல் இச்சைகளுக்கு ஆளாக்கி கர்ப்பமடைய செய்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருப்பூரிலுள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கடுத்து சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி தனியாக அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், சிறுமி கர்ப்பமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியிடம் இதை பற்றி விசாரித்த பெற்றோர் தன் மகளுக்கு நடந்த அநீதி குறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!
கொங்கு நகர் பகுதியியை சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்புணர்வு... 62 வயது கிழவனின் வெறி செயல்.!!