ஐபோனுக்காக நடந்த கொடூர கொலை.. தாத்தாவை கொலை செய்த 13 வயது பேத்தி.. கூலிப்படையாக நண்பர்கள்.! ஷாக் சம்பவம்.!
தாத்தாவை கொலை செய்து ஐபோன் வாங்க முற்பட்ட சிறுமி சிக்கிக்கொண்டார்.
கொலை:
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் வசித்து வருபவர் சிவன்குட்டி (வயது 67). இவர் கடந்த சனிக்கிழமையில் வீட்டில் இருந்த நிலையில், கை-கால்கள் கட்டப்பட்டு, துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: முதுமை தந்த வலி.. பாரமாக நினைத்த மகன்.. ஓடும் ரயில் முன் தள்ளி... திடுக்கிடவைக்கும் சம்பவம்.!
விசாரணை:
இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் வந்து விசாரணை செய்தனர். முதியவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் தங்க செயின், மோதிரமும் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொலை, கொள்ளை வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
சந்தேகம்:
விசாரணையில், சிவன்குட்டியின் உறவினர் ஒருவரின் 13 வயது சிறுமி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடந்த விசாரணையில் 17 வயது சிறுவனான காதலன், அவரின் நண்பர் என மற்றொரு 17 வயது சிறுவன் என 4 பேர் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரையும் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
அதிர்ச்சி தகவல்:
அதாவது, ஐபோன், இருசக்கர வாகனம் வாங்குவதற்கு தேவையான பணத்தை பெற, முதியவர் சிவன்குட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து இருக்கின்றனர். சிறுமியின் காதலன் அழைத்ததன் பேரில் பிறரும் வந்துள்ளனர். சிறுமி & அவரின் காதலரான 17 வயது சிறுவன் இச்செயலில் ஈடுபட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி, தாய் மீது 20 பேர் கும்பல் தாக்குதல்.. மணல் கொள்ளை துப்பு கொடுத்ததால் வெறிச்செயல்.! தமிழகமே ஷாக்.!