மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 இனி இவர்களுக்கு கிடையாது! தமிழக அரசின் அதிரடி...!!!
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதேநேரத்தில், விதிமுறைகளை மீறி சிலர் திட்டத்தின் பலனைப் பெற்று வருவது முதற்கட்ட கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
தகுதி விதிகளை மீறிய பயனாளிகள்
திட்டத்துக்கான வருமான வரம்பு உள்ளிட்ட அரசு நிர்ணயித்த தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத சிலரும் உதவித்தொகை பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பயனாளிகள் பட்டியலை முறையாக ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை சென்றடைவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: பெண்களே மாதம் ரூ.2500 பெற இது கட்டாயம்....! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!
அரசு ஊழியர் குடும்பங்களிலும் தீவிர சோதனை
குறிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பயன்பெறுகிறார்களா என்பது தற்போது தீவிரமாக சரிபார்க்கப்படுகிறது. தகுதி விதிகளுக்கு உட்படாத குடும்பங்கள் குறித்த விவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
தகுதியற்றோர் பட்டியலில் இருந்து நீக்கம்
வருவாய்த்துறையும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையும் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. விதிமுறைகளுக்கு மாறாக நிதியுதவி பெறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை உண்மையில் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ1,000 இன்று இவர்களுக்கு வராது....! அரசின் அதிரடி எச்சரிக்கை....!!!