வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தோழிகளுடன் ஏற்பட்ட பிரச்னை.! பரிதாபமாக போன 12 ஆம் வகுப்பு மாணவியின் உயிர்.!



12'th student commit suicide

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவியை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் கீர்த்தனா உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தற்போது டைப்பிங் கற்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு அருகே சென்று தனது உறவினர் ஒருவருக்கு செல்போனில் தொடர்புகொண்டு நான் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார்

உடனே அவரது உறவினர் அவ்வாறு செய்யாதே என சொல்லும் போதே செல்போனை ஆப் செய்யாமல் வீசிவிட்டு கிணற்றில் குதித்து விட்டார். செல்போன் ஆப் ஆகாததால் கீர்த்தனா கிணற்றில் விழுத்த சத்தம் அவரது உறவினருக்கு கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் என்ற நபருக்கு போன் செய்து நடந்த விஷத்தை கூறி கீர்த்தனாவை காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து பிரபாகரன் அங்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகில் கீர்த்தனாவின் செருப்பும், செல்போனும் கிடந்துள்ளது. உடனடியாக பிரபாகரன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த நிலையில் கீர்த்தனாவின் உடலை மீட்டனர். பின்னர் அவருடைய உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்போனில் வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைப்பது தொடர்பாக தனது தோழிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சல் அடைந்த கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.