தமிழகம்

தாயின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த 11 வயது சிறுமி..! 17 வயது சிறுவனால் உடல்நசுங்கி உயிரிழந்த சோகம்.

Summary:

11 years old girl dead in car accident

17 வயது சிறுவன் ஒருவன் ஓட்ட தெரியாமல் கார் ஒட்டியதால் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவர் தாயின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலநாயனகுண்டா என்ற பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது உறவினர் வீட்டில் இருந்த குவாலிஸ் காரை ஓட்டி பழகுவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளான். சரியாக கார் ஓட்ட தெரியாத அந்த சிறுவன் காரை எடுத்துக்கொண்டு தெருவில் வந்த போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுமி மீது மோதியுள்ளான்.

இந்த விபத்தில் சிறுமி அவரது தாய் கண் முன்னே உடல் நசுங்கி உயிரிழந்தார். உடனே இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவன் ஓட்டிவந்த காரை பறிமுதல் செய்ததோடு சிறுவனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் சிறுவனிடம் காரை ஓட்ட கொடுத்த அவனது உறவினர்களிடமும் போலீசார் விசாரித்துவருகின்றனர். தாயின் கண்முன்னே அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement