கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
உயிரிழந்த தந்தையின் சடலத்துடன் 16 மணி நேரம் தவித்த 11 வயது சிறுவன்.! கொரோனா சிகிச்சையில் தாய்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஐயனார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயனார் பாலம் ஒன்றில் வேலை செய்து வந்த போது எதிர்பாராத விதமாக பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஐயனாரின் மனைவி மற்றும் தாயார் ஐயனாரை உடன் இருந்து கவனித்து வந்துள்ளனர். ஐயனாருக்கு 11 வயதில் ஜீவா என்ற மகன் உள்ள நிலையில் ஐயனாரின் மனைவி பையனை அவரது சித்தப்பா வீடான ஏழுமலையின் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
சில நாட்கள் கழித்து ஐயனாரை வீட்டிற்கு அழைத்து சென்று கவனித்து கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் ஐயனார் மருத்துவமனையில் இருக்கும் போதே அவரது மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஐயனாரை வீட்டிற்கு அழைத்து வந்த சில மணி நேரத்திலேயே அவரது மனைவி மற்றும் தாயாரை கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருமாறு கூறியுள்ளனர். இருவரும் மருத்துவமனைக்கு சென்றதால் தந்தைக்கு எப்படி மருத்து மற்றும் சாப்பாடு கொடுப்பது என தெரியாமல் 11 வயது மகன் தவித்து வந்துள்ளான்.
அதனை அடுத்து ஐயனாரின் உடல் மிக மோசமாகவே அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அவரின் சடலத்தை யாரும் தொட கூடாது என போலீசார் கூறியுள்ளனர். எனவே மகன் ஜீவா மட்டும் தந்தையின் சடலத்துடன் 16 மணி நேரம் தவித்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.