தமிழகம்

சமையலில் அசத்திய 107 வயது பாட்டி காலமானார்!. பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி!.

Summary:

107 aged old aged chgef died


யூ டியூப் வீடியோக்களில் வயதான மூதாட்டி ஒருவர் விதவிதமாக சமையல் செய்து அசத்தி அனைவரிடமும் பிரபலமானவர் தான், குண்டூரை சேர்ந்த மஸ்தானம்மா என்ற மூதாட்டி. இவருக்கு நிறைய பேர் ரசிகர்களாக இருந்த நிலையில் அவரின் யூடியூப் சேனலுக்கு 12 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருந்தனர்.


உலக அளவில் இவரது வீடியோக்களை விரும்பி பார்ப்பது வழக்கம். முக்கியமாக இவர் செய்யும் அசைவ உணவுகள், மீன் வகை உணவுகள் அதிக அளவில் பரவியிடப்பட்டு வந்தது.

கடந்த 4 மாதங்களாக மஸ்தானம்மாவின் வீடியோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த சேனலுக்கு சொந்தக்காரரான லட்சுமண் என்பர், மஸ்தானம்மா வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சேனலுக்கு சொந்தக்காரர் மஸ்தானம்மாவின் இறுதிச்சடங்கு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு கணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.


Advertisement