வெளியானது 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை!! விவரங்கள் இதோ ..

வெளியானது 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை!! விவரங்கள் இதோ ..



101112-exam-time-table-announced

2019 -2020 ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் 2020இல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இந்நிலையில் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2020 ல் மார்ச் 2ம் தேதி துவங்கி 24 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் அந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாக உள்ளது. 

மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி முடிவடைகிறது . இதன் முடிவுகள் மே 14-ஆம் தேதி வெளியாகும்.

அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வுகள் 2020 மார்ச் 17ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 9ஆம் தேதி முடிவடையும். மேலும் அந்த தேர்விற்கான முடிவுகள்  மே மாதம் 4 ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu