10 மாவட்டங்களில் 3 நாட்கள் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை: வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு..!10 districts waiting for 3 days of rain

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த மாத தொடக்கத்தில் பரவலாக  மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை  தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மிதமானமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் வியாழக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, கடலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.