அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
நாளை திருமணம்... இன்று மாப்பிள்ளை கண்முன்னே மணப்பெண்ணுக்கே நேர்ந்த கோர சம்பவம்.!
மதுரை அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இன்று மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடைபெற இருந்த செவிலியர் தேர்வை எழுதுவதற்காக, மணமகள் வென்சியா (26) தனது வருங்கால கணவர் ஜெயபால்டினுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவரும் தேர்வுக்காக அதிகாலையில் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது வாடிப்பட்டி அருகே திண்டுக்கல்–மதுரை நான்கு வழிச்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாகச் சென்று, ஜெயபால்டின் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இதையும் படிங்க: போதையில் ஒவ்வொரு நாளும் சித்ரவதை.. மகனை கொன்று புதைத்த தாய்.. பகீர் சம்பவம்.!

இந்த கோர விபத்தில் வென்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவர் ஜெயபால்டின் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Madurai News: விமானத்தை பார்க்கும் ஆசையில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. துள்ளத்துடிக்க பலி.!