அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
யாரை சீண்டிப் பார்க்கிறீர்கள்?.. முதல்வர் விஜய்க்கு எதிராக கொந்தளித்த மேயர் பிரியா!
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவமரியாதை செய்யும் வகையில் முதல்வர் விஜய் பேசியதாகக் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சென்னை மேயர் பிரியா, சட்டப்பேரவையில் ஆளும் தரப்பினரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவையில் சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேசும் விதத்தைப் பார்த்துவிட்டு, திமுகவினரைப் பார்த்து கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், யாரை சீண்டிப் பார்க்கிறீர்கள், எப்படிப்பட்ட கழகத்தை சீண்டிப் பார்க்கிறீர்கள் என்பது தெரியாமல் சீண்டியிருக்கிறீர்கள். நாங்கள் எந்தப் பிரச்னைக்கும் செல்ல மாட்டோம். ஆனால், எங்களிடம் வரும் பிரச்னையை ஒருபோதும் விடமாட்டோம் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.
இதையும் படிங்க: குஷியோ குஷி.... பெண்களுக்கு CM விஜய் கொடுத்த அந்த 3 மெகா சர்ப்ரைஸ்! கொண்டாட்டத்தில் தமிழகம்...!!!
முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை செயல்பாட்டையும் விமர்சித்த அவர், திரைப்படத்தில் மூன்று மணி நேரம் நடித்துவிட்டு செல்வதைப் போல, சட்டப்பேரவையில் ஒரு மணி நேரம் பேசிவிட்டு செல்கிறார். கையை ஆட்டி ஆட்டி பேசுவதால் மட்டும் பேசுவது அனைத்தும் உண்மையாகிவிடாது. மேலும், மிசா சட்டம் குறித்து விஜய் பேசியதையும் அவர் விமர்சித்தார்
தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான தீர்ப்பை அனைவரும் கொடுப்பார்கள். என் தலைவரைத் தொட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இது என்ன நியாயம்.... கட்சியில் இணைந்த உடனே சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய முக்கிய பதவி! தவெகவில் பரபரப்பு...!!!