சிவன் வழிபாட்டில் சிறப்பான பாதரச லிங்க வழிபாடு.! இவ்வளவு மேன்மைகள் கிடைக்குமா.?! 

சிவன் வழிபாட்டில் சிறப்பான பாதரச லிங்க வழிபாடு.! இவ்வளவு மேன்மைகள் கிடைக்குமா.?! rasa-sivalingam-vazhipadu

இந்தியாவில் லிங்கத்தை வழிபட மூன்று நிலைகள் இருக்கின்றன. அவை, அருவம், உருவம், அருவுருவம் உள்ளிட்ட நிலைகள் தான். இது நமது நாட்டில் காலம் காலமாக இருக்கும் மிக பழங்கால வழிபாட்டு முறை. மூலக்கடவுளாக பார்க்கப்படும் சிவனை முன்னோர்கள் பல தலைமுறைகளாக வழிபட்டு வருகின்றனர். சிவனை வழிபட பல்வேறு வகைகள் இருக்கின்றன.  

லிங்கத்தை வழிபடும் முறைகளில் மிக மிக சிறப்பானதாக பார்க்கப்படுவது பாதரசத்தில் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபடுவது தான். 

Rasalingam

மற்ற வழிபாட்டு முறைகளை விட இதன் மூலம் அதிக பலன்களை நாம் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. குடும்பத்தில் வறுமை நீங்கி பணவரவு அதிகரிக்கும். இதன் காரணமாக குடும்பம் ஒற்றுமையுடன் செழிப்புடன் இருக்கும். 

சரிவர படிக்காத படிப்பில் ஆர்வமில்லாத குழந்தைகளை இந்த பாதரச லிங்க வழிபாட்டில் ஈடுபடுத்தினால் அவர்களது மனம் ஒருங்கிணைக்கப்பட்டு படிப்பதில் ஆர்வம் ஏற்படும். மேலும் இது மன அமைதி, மற்றும் கவலை தரும் எண்ணங்களை போக்கக்கூடிய சக்தி பெற்றது. 

Rasalingam

தொழில் செய்கின்ற இடத்தில் இந்த பாதரச லிங்கத்தை வைத்து அன்றாடம் வழிபட்டு விட்டு தொழிலை நடத்த ஆரம்பித்தது நமது வியாபாரத்தில் நல்ல உயர்வை ஏற்படுத்தும். கெட்ட சக்திகளினால் ஏற்படும் நஷ்டங்களை இது தவிர்க்க வழிவகை செய்யும். கடன் பிரச்சனைகள் முற்றிலுமாக நம்மை விட்டு விலகும். 

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ வைத்து பாதரச லிங்கத்தை வழிபடும் போது மலர்களால் அந்த இடத்தை அலங்கரித்து அதில் பாதரச லிங்கத்தை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு வில்வ இலைகளை கொண்டு பூஜிப்பது சிறந்த வழிபாட்டு முறையாகும்.