தடையை மீறி காட்டில் தவம் செய்த புத்த மதத் துறவி! சிறுத்தை தாக்கியதால் ஏற்பட்ட பரிதாபம்

தடையை மீறி காட்டில் தவம் செய்த புத்த மதத் துறவி! சிறுத்தை தாக்கியதால் ஏற்பட்ட பரிதாபம்



leopard-kills-meditating-buddhist-monk-in-maharashtra-f

மஹாராஷ்டிரா மாநிலம் தடோபா காட்டில், தடையை மீறி சென்று தியானம் செய்து கொண்டிருந்த புத்தமத துறவி சிறுத்தை தாக்கி பரிதாபமாக பலியானார்.  

போதி மரத்தடியில் தவம் புரிந்து ஞானம் பெற்றவர் கௌதம புத்தர். இவர் துவங்கிய புத்தமதத்தில் இன்று பல துறவிகள் இருந்து வருகின்றனர். இவர்களும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் தனியாக தவம் செய்வதை விரும்புகின்றனர். புத்தரைப் போல் தாமும் ஞானம் பெற வேண்டும் என்பதே இவர்களது ஒரே விருப்பம். இதனால் சிலர் கொடிய காட்டு விலங்குகள் இருக்கும் காட்டுப் பகுதிகளிலும் தங்களது உயிரை பணையம் வைத்து தவம் செய்து வருகின்றனர்.

maharastra

அப்படி ஒரு ஆசையோடு புத்தமத துறவியானவர் தான் ராகுல் வாக்கி போதி(35). இவர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தடோபா காட்டில், தவம் செய்வதற்காக தனது இரண்டு சீடர்களுடன் சென்றுள்ளார். தியானம் செய்து கொண்டிருந்த அந்த புத்தமத துறவியை காட்டில் இறுந்த சிறுத்தை ஒன்று திடீரென தாக்க துவங்கியது. இதில் படுகாயமடைந்த துறவி சம்பவ இடத்திலேயே பலியானார். 

சம்பவத்தின்போது அந்த மடத்தில் இருந்த துறவியின் சீடர் அவருக்கு உணவு கொடுப்பதற்காக அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போதுதான் சிறுத்தை துறவியை தாக்கியுள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த அந்த சீடர் அங்கிருந்து தப்பி ஓடி வந்துள்ளார். பின்னர் போலீசாரின் உதவியுடன் அந்த இடத்தில் சென்று பார்க்கும்போது துறவி இறந்து கிடந்துள்ளார்.

maharastra

பின்னர் துறவியின் உடலை மீட்டு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டிற்குள் கொடிய மிருகங்கள் இருக்கின்றன என பலமுறை எச்சரித்தும் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு புத்த மடத்தில் இருந்த அந்தத் துறவி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று தவம் புரிந்ததால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த 5வது பயங்கர சம்பவம் இது எனவும் தெரிவித்தனர்.

சிறுத்தை தாக்கி பலியான அந்த துறவியின் குடும்பத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு 12 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளது.