கருப்பசாமி கோவிலில் நடந்த விசித்திர சடங்கு..! பூசாரி பக்தர்களுக்கு நாணயம் கொடுக்கிறார்... அப்டியே தலைகீழாக நடக்குது! வினோத வீடியோ...!!!
திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் நடந்த ஒரு வித்தியாசமான சடங்கு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வழக்கமாக பக்தர்கள் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிலையில், இங்கு பூசாரியே பக்தர்களுக்குப் பணம் வழங்கும் காட்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பக்தர்களுக்கே நாணயம் வழங்கிய பூசாரி
அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படும் இந்த கோவிலில் நடைபெற்ற சடங்கின்போது, பூசாரி ஒருவர் வாயில் சுருட்டைப் புகைத்தபடியே தட்டில் இருந்த நாணயங்களை அள்ளி அங்கிருந்த பக்தர்களுக்குக் கொடுத்துள்ளார். அந்த காட்சியை அங்கு இருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதனால் அந்த வீடியோ குறுகிய நேரத்திலேயே வைரலாகி, பல்வேறு கருத்துகள் வெளியாகத் தொடங்கின. குறிப்பாக “பொதுவாக பக்தர்கள்தான் பூசாரிகளுக்குக் காணிக்கை தருவார்கள்; ஆனால் இங்கே பூசாரியே பணம் கொடுக்கிறார்” என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கிராமிய சடங்குகள் மீண்டும் கவனத்தில்
தகவலின்படி, இந்த கோவிலில் நடைபெறும் சில சடங்குகள் வழக்கமான ஆகம முறைகளிலிருந்து மாறுபட்டவை என கூறப்படுகிறது. பிராமணர் அல்லாத பூசாரிகள் வழிபாடு நடத்தும் இந்த ஆலயத்தில் இறைச்சி, மதுபானம், சுருட்டு போன்றவை படைக்கப்படும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்பின், இந்த வைரல் வீடியோ குறித்து ஆன்மீக ஆர்வலர்களும் தங்களது கருத்துகளை பகிரத் தொடங்கியுள்ளனர். காவல் தெய்வ வழிபாட்டில் இதுபோன்ற தனித்துவமான கிராமிய சடங்குகள் பல இடங்களில் இன்னும் தொடர்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்
சாதாரண கோவில் நடைமுறைகளிலிருந்து மாறுபட்ட இந்த கருப்பசாமி கோவில் சடங்கு தற்போது பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிலர் இதை பாரம்பரிய நம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கூறியுள்ள நிலையில், மற்றொருபுறம் இது குறித்து விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Tamil Nadu temple goes viral for giving money as prasad while priest is smoking.
This is what happens when you have All caste acharakas. None of them are hindus or care about tradition and culture. This is what RSS is aiming for pan india – TN modelpic.twitter.com/ZyuWJv9PDt
— Based Monk 📢(#Unreserved) (@thatindicmonk) May 13, 2026
இதையும் படிங்க: பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிடிக்காசு! கோவில் பிரசாதமே பணம் தான்..... வைரலாகும் வினோத கோவிலின் வீடியோ..!!!