கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
புடவை அணிந்த பெண் பிள்ளையார்.. கோவில் எங்கு உள்ளது தெரியுமா.?!
இந்து சமயத்தைப் பொறுத்தவரை ஆணாகவும், பெண்ணாகவும் பல்வேறு தெய்வங்களை நாம் வழிபட்டு வருகிறோம். அதுபோல விநாயகரை ஆண் வடிவில் தான் நாம் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பெண் வடிவில் விநாயகர் இருந்து அதை வழிபடும் முறை நமது மரபில் இருக்கிறது என்பது குறித்து தெரியுமா.?
இந்த அதிசய பெண் பிள்ளையார் கோவில் கன்னியாகுமரியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் இணைந்து ஒரே ரூபமாக காட்சியளிக்கின்றனர். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபத்தில் பார்ப்பது மிக அரியது. அந்த ரூபத்திற்கு தாணுமாலயன் என்று பெயர்.
இந்த தாணுமாலயன் கோவிலில் அமைந்துள்ள ஒரு தூணில் பெண் உருவத்தில் விநாயகரை பார்க்கலாம். இந்த பெண் வடிவ பிள்ளையாரை விநாயகி, விக்னேஷ்வரி, கணேஷ்வரி போன்ற பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கின்றனர்.
பெண் அணிகின்ற ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றி, மறுகாலை மடக்கி, புடவையில் பெண் தெய்வமாக விநாயகி காட்சி தருகிறாள்.
இந்த விசேஷ பிள்ளையாரை பல மாநிலங்களில் இருந்தும் நபர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். ஆண் தெய்வமாக இருக்கும் பிள்ளையார் பெண் தெய்வ அவதாரம் எடுத்த நிலையில் இந்த தெய்வம் வணங்கப்படுவதாக கூறப்படுகிறது.