வீட்டில் செல்வம் செழித்திருக்க கல் உப்பை இப்படி பயன்படுத்துங்கள்!!crystal-salt-for-growth-in-wealth

ல் உப்பு என்பது ஆன்மீகத்தில் மகிமை வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. ஏனென்றால் கல் உப்பு மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. எனவே இந்த கல் உப்பினை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் செல்வத்தை நிலைத்து வைத்திருக்க முடியும்.

இதற்கு கல் உப்பு ஒரு பாக்கெட், உப்பு ஜாடி ஒன்று, ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று. இந்த மூன்று பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள். பின் உப்பு ஜாடியில் கல் உப்பினை பிரித்து நிரப்பிக் கொள்ளவும்.

இந்த உப்பு ஜாடியானது கண்ணாடி ஜாடியாக இருந்தால் சிறப்பு. பின்னர் நிரப்பிய கல் உப்பின் மீது ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மாகலட்சுமியை மனதார வேண்டி கொண்டு வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி செல்வம் செழிக்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். 

இப்படியே ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செய்து வர வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் நீங்கி செல்வம் நிலைத்திருக்கும்.