மெஸ்ஸியை மிஞ்சிய 10 வயது சிறுவன்! சர்வதேச வீரர்களை கலங்கடித்த சிறுவனின் கார்னர் கிக்! வைரல் வீடியோ!young-boy-corner-kick-football-video

கேரள மாநிலத்தில் உள்ள கால்பந்தாட்ட பயிற்சி மையம் சார்பில் "ஆல் கலர் கிட்ஸ் புட்பால் டோர்ணமெட்" என்ற சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியில் சிறுவன் கார்னர் கிக் என்ற முறையில் அசத்தலான கோல் அடித்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டிற்கு என்னதான் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், கால்பந்திற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கால்பந்தாட்ட பயிற்சி மையம் சார்பில் "ஆல் கலர் கிட்ஸ் புட்பால் டோர்ணமெட்" என்ற சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கு கொண்ட ஜனாப் என்ற 10 வயது சிறுவன் கார்னர் கிக் என்ற முறையில், பந்தை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு கோல் போஸ்டிற்கு பந்தை அடித்துள்ளார்.

 ஆனால் சிறுவன் சர்வதேச வீரர்களை மிஞ்சும் வகையில் பந்தை நேரடியாக கார்னரிலிருந்து அடித்து பந்தைக் கோல் போஸ்டிற்குள் அடித்துள்ளான். இதேபோன்று கோல் அடிப்பதற்கு சர்வதேச அளவிலான வீரர்களே சிரமப்படுவார்கள். 

ஆனால் அதை அந்த சிறுவன் சர்வ சாதாரணமாக அடித்து அசத்தியுள்ளார். சிறுவன் அடித்த கொலை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.