இந்தியா விளையாட்டு

எத்தனைமுறை பார்த்தாலும் உற்சாகப்படுத்தும் நேற்றைய சூப்பர் ஓவரின் வீடியோ!

Summary:

yesterday super over video


நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது மூன்றாவது டி20 போட்டியின் சூப்பர் ஓவரில் ரோகித்சர்மா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்த வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. இந்தநிலையில்  இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி நேற்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது.180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர்  அறிவிக்கப்பட்டது.

அந்த சூப்பர் ஓவரை இந்திய அணியின் பும்ரா வீசினார். சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ஓட்டங்களை பெற்றது. 18 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய போது, ரோகித்சர்மா கடைசி 2 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் தேவை என்ற போது, அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அந்த சூப்பர் ஓவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement