பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
மகளிர் பிரீமியர் லீக் 5-வது சீசன்.. ஏலம் முதல் போட்டி தொடக்கம் வரை.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 5-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் அக்டோபர் 28-ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. அணிகள் தங்களது வீராங்கனைகளை தக்கவைத்துக் கொள்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 28 எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
🚨 News 🚨
#TATAWPL 2027 to be played from 14 January to 7 February 2027 🗓️
இதையும் படிங்க: கோப்பையை வாங்க இந்தியாவுக்கு தகுதியில்லை.. பாகிஸ்தான் ரசிகர்கள் சர்ச்சை.. வைரல் வீடியோ!
Player Auction to be held on 28 October 2026 in Kochi 📍
More details ▶️ https://t.co/tuEXkaaY6T https://t.co/mjLcSOJawp
— Women's Premier League (WPL) (@wplt20) September 16, 2026
நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி, பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
5-வது சீசனிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகளே தொடர்ந்து களமிறங்க உள்ளன. இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக WPL நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஆசியக் கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் அணி.. பரிசளிப்பு விழாவில் பரபரப்பு.. தொடரும் சர்ச்சை!