விளையாட்டு

உலகக்கோப்பை 2019: இந்திய அணி வீரர்களின் இறுதி பட்டியல் இதுதான்!

Summary:

World cup 2019 indian final 15 members squad

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்க உள்ளது. மே 30 அன்று தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா மோதுகிறது. எந்த அணி இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல போகிறது என உலக நாடுகளே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

இந்நிலையில் இந்திய அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. அணைத்து நாடுகளும் உலக கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்கள் அறிவித்துவிட்டது.

Indian cricket Team

இந்திய அணியும் ஏற்கனவே 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் கேதர் ஜாதவ் காயம் காரணமாக விளையாடுவதில் சந்தேகம் இருந்தது. தற்போது அவரது காயம் குணமாகி அவரும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரோகித் சர்மா, ஷீகார் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால், ஜாஸ்பிரிட் பூம்ரா, முகமது ஷமி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


Advertisement