விளையாட்டு

பலம் வாய்ந்த இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்; மழையால் ஆட்டம் தடைபடுமோ ரசிகர்கள் கலக்கம்.!

Summary:

world cup 2019 - today match - ind vs aus - oval

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்துள்ள போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா விளையாடும் போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி புதிய உத்வேகத்தில் உள்ளது. கடைசி போட்டியில் சதம் அடித்து நல்ல பார்மில் உள்ள ரோகித் சர்மா இன்றைய போட்டியிலும் ஜொலிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி எளிதாக அமையும். அதே வேளையில் ஷிகார் தவான், விராட் கோலி ஆகியோர் ஆட்டத்தில் கூடுதல் கவனம் தேவை.

நடுகள வீரர்களான லோகேஷ் ராகுல், தோனி ஆகியோர் நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டியது அவசியமாகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் பும்ராவின் பந்துவீச்சு  எதிரணியினருக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. அதே நிலை இன்றும் தொடர வேண்டும். கடந்த போட்டியில் சுழற் பந்து வீச்சில் அசத்திய குல்தீப், சாகல் இன்றும் அசத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை அந்த அணியின் பேட்டிங் வரிசை அசுர பலமாக உள்ளது. பின்ச், வார்னர் கூட்டணி அதிரடி துவக்கம் அளிக்கலாம். கவாஜா, ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ஸ்மித் முதல் கூல்டர் நைல் வரை பேட்டிங் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. இவர்களை விரைவாக வெளியேற்ற இந்திய பவுலர்கள் முயற்சிக்க வேண்டும்.பவுலிங்கை பொறுத்த வரையில் ஸ்டார்க், கம்மின்ஸ், கூல்டர் நைல் கூட்டணி மீண்டும் மிரட்டலாம். 

இந்த உலக கோப்பை தொடரில் மழை பொழிவு ஆட்டத்தின் முடிவை மாற்றி அமைத்து வருகின்றது. பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆட்டம் ரத்தானது. போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணியினருக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. போட்டி ரத்தானவுடன் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

 

இதனை தொடர்ந்து இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படுமோ என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் போட்டி நடைபெறும் ஓவலில் மாலை வரை வானம் மேகமூட்டம், வெயில் என மாறி மாறி காணப்படும். மழை வர 10 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓவல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது.


Advertisement