உலகக் கோப்பை 2019ல் இவர்கள்தான் ஜொலிப்பார்கள்; ஜாம்பவான் சச்சின் கணிப்பு.!

உலகக் கோப்பை 2019ல் இவர்கள்தான் ஜொலிப்பார்கள்; ஜாம்பவான் சச்சின் கணிப்பு.!


world cup 2019 - england - sachin tendulkar speech

இந்தியாவில் தற்போது ஐபிஎல் சீசன் 12 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த லீக் போட்டிகள் நிறைவடையும் நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பிளே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இன்னும் ஒரு சில போட்டிகளில் அடுத்த 2 அணிகளும் தேர்வாக உள்ள நிலையில் முக்கியமான அடுத்த கட்டப் போட்டிகள் இனி நடைபெற உள்ளது.

world cup
 
இந்நிலையில் இப்போட்டி தொடர் நிறைவடைந்ததும் உலகக்கோப்பைக்கான போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இவ்வாண்டு இங்கிலாந்தில், வேல்ஸ் உள்ளிட்ட 8 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற 10 அணிகள் சமீபத்தில் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

world cup

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். பெரும்பான்மையான போட்டிகளின் முடிவுகளின் படி பேட்ஸ்மேன்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இந்த ஆதிக்கம் உலக கோப்பை போட்டி தொடரிலும் தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது: 

world cup

இந்த சம்மர் சீசன், சூப்பரான சீசனாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் இதே சூழல் தான் அமைந்தது. அதே போல இம்முறை பேட்டிங்கிற்கு அதிக சாதமாக இருக்கும் என்பதில் எவ்விதசந்தேகமும் இல்லை. பவுலர்களை விட பேட்ஸ்மேன்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள்.’ என்றார்.