தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
உலகக் கோப்பைக்கு யார் யார்? இன்னும் சில தினங்களில் தேர்வு முடிவு; பிசிசிஐ அதிரடி அறிவிப்பு.!

2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 11 சீசன் நிறைவான ஐபிஎல் தொடர் 12 வது சீசன் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தீவிரமாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்ததும் மே மாத இறுதியில் உலகக் கோப்பை போட்டித் தொடர் நடைபெற உள்ளது. ஏற்கனவே யார் யார் உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து ஓரளவிற்கு உத்தேசமாக இந்திய அணி உள்ளது.
தற்போது இந்திய அணியில் விளையாடும் வீரர்களில் 2 முதல் 3 வீரர்கள் வரை மாற்றம் செய்யப்படலாம் அல்லது புதிதாக தேர்வு ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு துவக்கத்தில் ஆடுவதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். அதே சமயம் ஐந்தாவது இடத்தில் விளையாடக்கூடிய தல தோனியும் சிறப்பான பார்மில் தற்போது உள்ளார். இந்நிலையில் 4வது மற்றும் 6வது இடத்தில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் யார் யார்? என்பதில்தான் தற்சமயம் பிசிசிஐயின் தேர்வாக இருக்கும்.
அதேபோல் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பும்ரா, புவனேஷ் குமார் ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வேகப்பந்துவீச்சுக்கு கூடுதலாக 1 அல்லது 2 வீரர்கள் தேர்வு செய்யப்படலாம்.
சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் குல்தீப் யாதவ், சாகல், ஜடேஜா ஆகியோர் தற்சமயம் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளார்கள். அதேவேளையில் தற்பொழுது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அஸ்வினுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 20ம் தேதிக்குள் உலக கோப்பை அணி அறிவிக்கப்படும் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்த நிலையில், 15ம் தேதி அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் யார் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.