தோனிக்கு வந்த சோதனை; உலக கோப்பை போட்டியில் இடம்பெறுவாரா என ரசிகர்கள் அச்சம்!
தோனிக்கு வந்த சோதனை; உலக கோப்பை போட்டியில் இடம்பெறுவாரா என ரசிகர்கள் அச்சம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தனது முதலாவது அறிமுகம் ஆகியுள்ளார் ரிசப் பண்ட். தோனியும் இந்த போட்டியில் ஆடுவதால் தோனியின் திறமையை சோதிப்பதற்காகவே இருவரும் ஒரே ஆட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்த போட்டியில் தோனி வழக்கம்போல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார். நடுத்தர பேட்ஸ்மேனாக களம் இறக்கக்கப்பட்டுள்ளார் ரிசப் பண்ட். இந்த போட்டியில் அறிமுகமாகிய ரிசப் பண்டிற்கு முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணிக்கான தொப்பியை அளித்து அவரை அணிக்கு அறிமுகப்படுத்தினார். ரிசப் பண்ட் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் தோனி இடம் பெறுவாரா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அண்மை காலமாக தோனியின் பேட்டிங் ரசிகர்களை கவரும் வகையில் அமையவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடர், ஆசிய கோப்பை என வரிசையாக சொதப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.
அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அறிமுகமானார். டெஸ்டின் 5 இன்னிங்ஸில் 346 ரன்கள், சராசரி 43.25 வைத்துள்ளார்.
யார் களத்தில் ஆடினாலும் சரி இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் போதும் என்று பலர் எண்ணுகின்றனர்.