2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி.. இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன!Wi won in 2nd t20

நேற்று இரவு நடைபெற்ற இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரோகித் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் 19.4 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது.

WI vs IND

அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 31 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒபத் மெகாய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

WI vs IND

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார்.