த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
ஐ.பி.எல். போட்டி எப்போதுதொடங்கும்.? இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
பாதுகாப்பான சூழல் உருவான பிறகே ஐ.பி.எல். போட்டி தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பல நாடுகளுக்கு சென்று விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் ஊரடங்கை கடைபிடித்ததால் இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ளது.
கொரோனா நிலைமையை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து, போட்டியை தொடங்குவதற்குரிய சாத்தியக்கூறு குறித்து ஆராயும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.