விளையாட்டு

22 வயதில் இவ்வளவு மன தைரியமா! தாயார் இறந்த செய்தி கேட்டும் தொடர்ந்து ஆடிய கிரிக்கெட் வீரர்

Summary:

west indies cricketer alsai joseph's mom dead

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 187 ரன்னில் ஆள் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக 22 வயதான வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்பின் தாயார் ஷரோன் ஜோசப் மரணம் அடைந்த தகவல் அணி வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கண்ணீர் விட்டு அழுத அவருக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். துக்கம் அனுசரிக்கும் வகையில் இரு நாட்டு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

அந்த நாளின் துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் சரியாவே, தன் சோகத்தையும் பொருட்படுத்தாமல் அல்சாரி ஜோசப் பத்தாவது வீரராக களமிறங்கினார். 20 பந்துகளை சந்தித்த அவர் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 306 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

பின்னர் 119 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து அணி நான்காவது நாளில் 132 ரன்களில் சுருண்டது. இந்த இன்னிங்சிலும் தனது அணிக்காக பந்துவீசிய அல்சாரி  ஜோசப் 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுள்ளது.

தனது தாயார் இறந்த செய்தி கேள்விப்பட்டும் தொடர்ந்து 2 நாட்களாக தனது அணிக்காக விளையாடிய 22 வயதான அன்சாரி ஜோசப்பிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது இந்த மன தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.


Advertisement