சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை படைத்தார் விராட்



virattnew-record

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்    தனது 18,000 ரன்களை நிறைவு  செய்து புதிய சாதனை புரிந்துள்ளார்.

தற்போது   இங்கிலாந்து   சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள   இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன்  5  டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

Virat Kohli

 5 போட்டிகள் கொண்ட   இந்த தொடரின்  மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3-1 என்ற கணக்கில் முன்பே  தொடரை வென்றுவிட்ட நிலையில் இரு அணிகளுக்கு  இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன்  ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு பட்லர் 89 ரன்களும், அலெய்ஸ்டர் குக் 71 ரன்களும் எடுத்து உதவியதால்  முதல் இன்னிங்ஸில் 332 ரன்களில்  தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.


இதனையடுத்து இந்திய அணிக்கு  துவக்க ஆட்டக்காரர்களாக   சிகர்த்தவனும்      
  லோகேஷராகுலும் களம் புகுந்தநர். தவான் மூன்று  ரன்னில் தனது 
 விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன் பின் களம் இறங்கிய  கேப்டன்  கோஹ்லி தனக்கே  உரித்தான  ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து  மீட்க போராடினர்.  இருப்பினும் 49 ரன்களில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து அவுட்டானார்.

Virat Kohli

நேற்றைய  ஆட்டத்தின்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்   தனது 18,000 ரன்களை நிறைவு  செய்தார் விராட்.

இது தவிர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  மிகவிரைவாக  18,000 ரன்களை கடந்த வீரர்கலின்  பட்டியலில் முதலிடத்தை பிடித்து   இந்தியாவிற்கு பெருமை      சேர்த்துள்ளார். இவர் இந்த சாதனையை 382 இன்னிங்ஸ்ல் நிகழ்த்தியுள்ளார்.

சர்வதேச   அரங்கில் மிக விரைவாக 18,000 ரன்களை கடந்த வீரர்கள்  விவரம்  இங்கே.

Virat Kohli

லாரா ; (411 இன்னிங்ஸ்) - இரண்டாவது இடம் 
சச்சின் டெண்டுல்கர்; (412 இன்னிங்ஸ்) - மூன்றாவது இடம் 

இந்திய அணியின்  முன்னாள் வீரரும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான  சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 412 இன்னிங்ஸில் 18,000 ரன்களை கடந்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நேற்றைய  ஆட்டநேர  முடிவில்  இந்தியஅணி  51.0 ஓவர்களுக்கு  174 ரன்களுக்கு    6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்னும் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிக்ஸ் ஸ்கோரெய் எட்ட 158 ரன்கள் தேவை.