7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய விராட் கோலி! திகைத்த அவரது மனைவி! வைரல் வீடியோ!

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய விராட் கோலி! திகைத்த அவரது மனைவி! வைரல் வீடியோ!



viratkohli getting autograph with young boy

இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அத்துடன் அவரது ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வருகிறார் விராட்.


விராட் கோலி ஜமைக்காவில் 7 வயது சிறுவன் ஒருவனிடம்  ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலியிடம் பலர் ஆட்டோகிராப் வாங்குவது வழக்கம். ஆனால் அந்த வீடியோவில் அந்த  சிறுவன் கோலியிடம் வந்து, உங்கள் ஆட்டோகிராப்புக்கு பதிலாக எனது ஆட்டோகிராப் வேண்டுமா என கேட்டுள்ளார்.

அந்த சிறுவனின் ஆட்டோகிராப்பை அவரிடமிருந்து பெற்ற பிறகு தான் விராட் கோலி அங்கிருந்து சென்றார். இந்த வீடியோவில் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் சிரித்தபடியே இருந்தனர். இதனை ஒருவர்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.