இந்த புதிய மாற்றத்திற்கு எனக்கு ஆதரவில்லை முரண்டு பிடிக்கும் விராட் கோலி! தாதா கங்குலியின் பதில்!

ஒருநாள் போட்டி மட்டுமின்றி டி20 போட்டிகளிலும் அதிக அளவு தற்போது நடத்தப்பட்டு வருவதால் கிரிக்கெட்டின் பாரம்பரிய போட்டியான டெஸ்ட் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்தது. இதனால் மக்களிடையே மீண்டும் டெஸ்ட் போட்டி மீது வரவேற்பு அதிகரிக்க ஐசிசி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தியது.
இதுதொடர்பாக அசாம் மாநிலம் தலைநர் கவுஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, 'டெஸ்ட் போட்டி நாள்களை குறைப்பது சரியாக இருக்காது. டெஸ்ட் போட்டியின் நாள்களை குறைப்பதற்கு நான் ஆதரவளிக்கவில்லை. அவ்வாறு மாற்றங்கள் கொண்டு வந்தால் வரும் நாள்களில், அதை 3 நாள்களாக குறைப்பதற்கு கோரிக்கை வரும் என கூறினார்.
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாகக் குறைப்பதற்கு 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் அறிமுகம் செய்ய ஐசிசி உத்தேசித்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், 'முதலில் ஐசிசி இதனை கொண்டு வரட்டும் பின்பு முடிவு செய்யலாம்' என கூறியிருந்தார்.