இப்படியும் ஒரு சாதனையா! 70 வருட சாதனையை முறியடித்த விராட் கோலி

இப்படியும் ஒரு சாதனையா! 70 வருட சாதனையை முறியடித்த விராட் கோலி


Virat kohli crossed don bradman record as captain

புனேவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 150 ரன்களை கடந்த போது கேப்டனாக 150 ரன்களை அதிக முறை கடந்தவர் என்ற சாதனையை படைத்தார். 

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் இந்தய அணியின் கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் எடுத்தார். 

Virat Kohli

இவர் இந்த இன்னிங்சில் 150 ரன்களை கடந்த போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் கேப்டன் பதவியில் இருந்து கொண்டு அதிக முறை 150 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இவர் இதுவரை இந்த இலக்கை 9 முறை கடந்துள்ளார். 

இவருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் சர் டான் பிராட்மேன் 8 முறை இந்த இலக்கை கேப்டனாக கடந்துள்ளார். பிராட்மேன் கடைசியாக 1948 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஆடினார். 

Virat Kohli

70 வருடங்களாக இதுவரை யாராலும் தகர்க்க முடியாத இந்த சாதனையை விராட் கோலி தற்போது முறியிடித்துள்ளார். மேலும் அதிக இரட்டை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கோலி.