கேட்ச்னா இது கேட்ச்...!! எப்டிங்க அந்த பந்தை புடுச்சாறு..!! வைரலாகும் விராட்கோலியின் வேற லெவல் கேட்ச் வீடியோ..



Virat kholi stunning catch during 3rd odi against to England

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பிடித்த அற்புதமான கேட்ச் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய நேற்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது. கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில், கடைசி ஓவரை தமிழக வீரர் நடராஜன் மிக சிறப்பாக வீசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

ind vs eng

இந்நிலையில் நேற்றைய போட்டியின்போது அணியின் கேப்டன் விராட்கோலி பிடித்த கேட்ச் ஒன்றின் வீடியோ ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் வீசிய பந்தை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர் அடில் ரஷித், அந்த பந்தை வேகமாக அடித்தார்.

அப்போது ஷாட் மிட்-ஆஃபில் பீல்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி பாய்ந்து அந்த பந்தை இடது ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்தார். இதனால் அடில் ரஷித் 19 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்நிலையில் விராட்கோலி அந்த கேட்சை பிடித்த விதத்தை பார்த்த ரசிகர்கள், விராட் கோலியின் பெஸ்ட் கேட்ச்களில் இதுவும் ஒன்று என அவரை புகழ்ந்துவருகின்றனர்.