இந்தியாவை கதற விட்ட இரண்டு பாகிஸ்தான் வீரர்கள்.! கட்டியணைத்து பாராட்டிய விராட் கோலி.! வைரல் வீடியோ

இந்தியாவை கதற விட்ட இரண்டு பாகிஸ்தான் வீரர்கள்.! கட்டியணைத்து பாராட்டிய விராட் கோலி.! வைரல் வீடியோ


virat appreciate pakistan player

உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. 29 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை தொடரில், இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வி்க்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். நேற்றய வெற்றியை பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் உற்சாகமாக கொண்டாடினர். நேற்றைய போட்டி முடிந்ததும், மைதானத்தில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகம்மது ரிஸ்வானை இந்திய கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.