சினிமா விளையாட்டு

விராட், அனுஷ்கா திருமணத்தில் நடந்த மோசடி; வெளியான பகீர் தகவல்

Summary:

Virat and anushka used fake names for marriage

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அனுஷ்கா சர்மா.

இவர்கள் காதலிக்க துவங்கிய காலத்தில் இருந்தே விராட் கோலி விளையாடும் போட்டிகளை காண அனுஷ்கா சர்மா நேரடியாக மைதானத்திற்கே சென்றுவிடுவார். மைதானத்தில் இருந்து கொண்டே கோலி அனுஷ்காவிற்கு செய்த செய்கைகள் பல சமயங்களில் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாத கோலி அனுஷ்கா சர்மாவை கடந்த வருடம் டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 

திடீரென நடைபெற்ற இவர்களது திருமணத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள அனுஷ்கா மற்றும் கோலி ஒரு சில ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளது தற்பொழுது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இத்தாலியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உண்மையான பெயரினை மறைத்து போலியான பெயரில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என வெறும் 42 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக அனுஷ்கா ஷர்மா தற்பொழுது தெரிவித்துள்ளார். சமீபத்தில் வோக் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள அனுஷ்கா ஷர்மா அவர்களது திருமணம் எப்படி ரகசியமாக நடந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அனுஷ்கா சர்மா "பொதுவாக பிரபலங்களின் திருமணங்கள் ஆடம்பரமாக நடைபெறும். ஆனால் எங்களது திருமணத்தை எளிமையான முறையில் நடத்திட நாங்கள் முடிவு செய்தோம். எனவே திருமண ஏற்பாட்டாளர்களிடம் எங்களது உண்மையான பெயரினை மறைத்து போலியான பெயரில் பதிவு செய்தோம். அதில் விராட்டின் பெயர் ராகுல்" என கூறியுள்ளார்.


Advertisement