வீடியோ: சிறப்பாக ஆடிய விஜய்சங்கருக்கு கோலியால் நேர்ந்த துரதிருஷ்டம்!

வீடியோ: சிறப்பாக ஆடிய விஜய்சங்கருக்கு கோலியால் நேர்ந்த துரதிருஷ்டம்!


vijayshankar-runout-in-2nd-odi

நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

ஆட்டத்தின் முதல் ஓவர் கடைசி பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்த தவானை மேக்ஸ்வெல் தன் சாமர்யத்தால் எல்பிடபுல்யூ ஆக்கி வெளியேற்றினார். அடுத்து வந்த ராயுடுவும் 19 ரன்னில் ஆட்டமிழக்க 5ஆவது வீரராக விஜய்சங்கர் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 

cricket

ஒருநாள் போட்டியில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட விஜய்சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகள் சென்ற வண்ணம் இருந்தன. கோலியை விட வேகமாக ரன்களை குவிக்க தொடங்கினார் விஜய்சங்கர். 

41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிகசருடன் 46 ரன்கள் எடுத்திருந்த விஜய்சங்கர் ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்யும் ஆர்வத்தில் களத்தில் நின்றார். ஆனால் அவருடைய துரதிருஷ்டம் 46 ரன்னிலே ஆட்டமிழக்கும் நிலை உருவானது. 

cricket

ஆடம் சம்பா வீசிய 29 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தினை கோலி சந்தித்தார். யார்க்கராக வந்த பந்தினை கோலி நேர் திசையில் வேகமாக அடிக்க பந்து சம்பாவின் கையில் பட்டு எதிர் ஸ்டம்பில் அடித்தது. பாவம் விஜய்சங்கர், கிரீஸை விட்டு பேட்டை வெளியில் எடுத்த அவர் மீண்டும் வைப்பதற்குள் கண்ணிமைக்கும் வேகத்தில் வந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. விஜய்சங்கர் ரன் அவுட்டாகி வெளியேறினார்.