நேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க வந்த பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?

நேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க வந்த பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?


Varalakshmi sarathkumar watch ipl match chennai vs delhi

ஐபில் சீசன் 12 ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 50 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் இன்னும் 10 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. நடப்பு சாம்பியான சென்னை அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியை எதிர்கொண்டு 80 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐபில் அணிகளை பொறுத்தவரை சென்னை அணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள விஷயம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதேபோல சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சாதாரண மக்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள்கூட சென்னை அணிக்கும், தோனிக்கும் ரசிகர்களாக உள்ளனர்.

IPL 2019

இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த ஆட்டத்தை பார்க்க பிரபல தமிழ் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வந்திருந்தார். மேலும் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பரம ரசிகையான இவர் தோனியின் புகைப்படம் பதித்த  மஞ்சள் நிற டி-சர்ட்டை அணிந்து போட்டியை காண வந்திருந்தார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இதோ அந்த புகைப்படம்.