ஆட்டத்தின் நடுவே மயங்கி விழுந்து உயிர் இழந்த அம்பயர். சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்.
ஆட்டத்தின் நடுவே மயங்கி விழுந்து உயிர் இழந்த அம்பயர். சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்.

கிரிக்கெட் போட்டி சற்று ஆபத்து குறைவான போட்டி என்றாலும் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக சில துயர சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் உள்ள TMC மைதானத்தில் நடுவர் பணியில் ஈடுபட்டிருந்த நடுவர் ஒருவர் ஆட்டத்தின் நடுவிலையே சுருண்டு விழுந்து உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நசீம் ஷேக் என்ற அந்த நடுவர் உள்ளூர் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர் பணி செய்வதில் புகழ் பெற்றவர். அந்த வகையில் நேற்று நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு நடுவர் பணி செய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளன்னர். ஆனால், அவர் வரும் வழியில்லையே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்னனர்.
56 வயதாகும் நசீம் ஷேக் திடீரென மரணம் அடைந்தது அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.