இந்திய தேசத்திற்காக பதக்கம் வாங்கித்தந்த வீரர்!. டீ கடையில் வேலை செய்யும் அவல நிலை!.

இந்திய தேசத்திற்காக பதக்கம் வாங்கித்தந்த வீரர்!. டீ கடையில் வேலை செய்யும் அவல நிலை!.



the indian bronze medallist, working in tea shop


18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹரிஷ் குமார், செபாக் டக்ரோ விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். 

ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவுற்ற நிலையில் நாடு திரும்பிய ஹரிஷ் குமார், வாழ்வாதாரத்திற்காக தேனீர் விற்று வருகிறார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் குமார், நான் 2011 ஆம் ஆண்டு செபாக் டக்ரோ விளையாட்டை ஆட ஆரம்பித்தேன். எனக்கு குருவாக ஹேம்ராஜ் என்பவர் தான் எனது குருநாதர்.

medalist

இந்த விளையாட்டில் என்னை அறிமுகப்படுத்திவைத்தவர் எனது குருநாதர் தான். அதன்மூலம் நான் மாதாந்திர நிதி தொகையும், உபகரணங்களையும் பெற்று கொண்டேன். எனது சிறந்த வழிகாட்டி எனது குருநாதர் ஹேம்ராஜ் அவர்கள் தான். 

என் குடும்பத்தில் உறுப்பினர்களின் எணிக்கை அதிகம் ஆனால் எங்கள் குடும்பத்தின் வருமானம் மிகக்குறைவு. இதனால் நான் என் பெற்றோர்கள் நடத்தி வரும் சிறிய தேனீர் கடையில் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பயிற்சி நேரம் போக அங்கு வேலை செய்வேன்.

medalist

தினமும் நான்கு மணி நேரம், பயிற்சி மேற்கொள்வேன் மீதமுள்ள நேரத்தில் கடையில் வேலை செய்வேன், எதிர்காலத்தில் என் குடும்பத்தை காப்பாற்ற  நல்ல வேலையை தேடிவருகிறேன் என கூறினார்.