தமிழகம் இந்தியா விளையாட்டு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டு தற்கொலை! கண்ணீர்விட்டு அழும் ரெய்னா, ஹர்பஜன்!

Summary:

The former cricketer of the Indian team suicide


தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்று திடீரென மரணம் அடைந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 57 வயதான சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. சந்திரசேகர் தனது மைலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதை சென்னை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மறைந்த வி.பி.சந்திரசேகருக்கு சவுமியா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திரசேகர் தமிழ்நாடு அணி கேப்டனாக இருந்துள்ளார். 

1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் வி.பி. சந்திரசேகர் விளையாடியுள்ளார். வி.பி. சந்திரசேகர் கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழக ரஞ்சி அணியின் பயிற்சியாளராக வி.பி. சந்திரசேகர் பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், நேற்று இரவு விபி சந்திரசேகர் தனது அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வி பி சந்திரசேகரின் மறைவுக்கு இந்திய வீரர்கள் ரெய்னா, ஹர்பஜன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement