பி.டி உஷாவை பின்னுக்கு தள்ளிய நம்ம திருச்சி தனலட்சுமி.! குவிந்து வரும் பாராட்டுகள்.!

பி.டி உஷாவை பின்னுக்கு தள்ளிய நம்ம திருச்சி தனலட்சுமி.! குவிந்து வரும் பாராட்டுகள்.!



thanalakshmi beat PT Usha

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் வீழ்த்தி கவனம் பெற்றார். 

நேற்று முன்தினம் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்தார். இந்தச் சாதனையைப் படைத்திருக்கும் 22 வயதான தனலட்சுமி திருச்சியைச் சேர்ந்தவர். அவருக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

PT Usha
திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் கல்லூரியில் படிக்கும்பொழுது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பல்வேறு சாதனை புரிந்தவர். தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார்.