விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி; அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க போராடும் இளம் வீரர்கள்! வாய்ப்பு யாருக்கு

Summary:

Team squad for first odi

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று கயானாவில் நடைபெற உள்ளது. புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள இளம் வீரர்கள் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க இது தான் நல்ல சந்தர்ப்பம்.

டி20 தொடரில் இடம் பெற்றிருந்த குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர், தீபக் சாகர் ஆகியோர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், சாகல், கேதர் ஜாதவ் மற்றும் முகமது சாமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய நவ்தீப் சைனி முதல் ஒருநாள் போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சமி களமிறக்கப்படலாம்.

பேட்டிங்கை பொருத்தவரை ஸ்ரேயஸ் ஐயருக்கு 3 டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம். மேலும் கேதர் ஜாதவிற்கு பதிலாக மனிஷ் பாண்டே இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

விக்கெட் கீப்பரை பொருத்தவரை ரிஷப் பண்ட் ஒருநாள் தொடருக்கும் தனி ஆளாய் செயல்பட போவது உறுதி. கடைசி டி 20 போட்டியில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் ஒருநாள் தொடரிலும் தனது திறமையை நிரூபித்தால் தோனியின் இடத்தை நிரந்தரமாக கைப்பற்றி விடலாம்.

உத்தேச 11 வீரர்கள்:

ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜடேஜா, சாகல், முகமது சமி, நவ்தீப் சைனி, கலீல் அஹ்மத் 


Advertisement