இந்தியா விளையாட்டு

ஓரங்கட்டப்பட்ட தமிழக வீரர்கள்! ஆறுதலுக்காக வாய்ப்பளிக்கப்பட்ட மற்றொரு தமிழக வீரர்!

Summary:

tamilnadu cricket players removed in west indies series

இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத்தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. உலக கோப்பை அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் மேற்கிந்தியத்தீவுக்கு அணிக்கு எதிராக ஆடும் ஆட்டத்தில் இடம்பெறவில்லை.

அவர்களுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், மாயங்க் அகர்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு டி.20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகை போட்டிகளுக்குமே கோலி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஒருநாள் போட்டி வீரர்கள்:
 கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, பந்த், சாஹல்,  கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர். 

டி.20 அணி போட்டி வீரர்கள்:
கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, பந்த்,  கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளனர். 

டெஸ்ட் அணிபோட்டி வீரர்கள்:
கோலி, ரஹானே, மாயங்க் அகர்வால், கே.எல் ராகுல், புஜாரா, விஹாரி, ரோகித் சர்மா, பந்த், விருத்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.


 


Advertisement