விளையாட்டு

இதை செய்தால் நாளை இந்திய அணி வீழ்வது உறுதி! நியூசிலாந்து வீரர் சொன்ன பலே ஐடியா!

Summary:

Taking wickets up front is the key to beating India

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்திலும், தலா நான்கு புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் இந்திய இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் விதியசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணு நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி வீரர் தவான் காயம் காரணமாக விளையாடாத நிலையில் மிக வலுவாக உள்ள நியூசிலாந்து அணியை இந்திய அணி நாளை எதிகொள்கிறது.

இந்நிலையில் இந்திய அணியை எப்படி வீழ்த்துவது என்பது குறித்து பேசியுள்ளார் நியூசிலாந்து அணி வீரர் பெர்குசன். விராட்கோலி, ரோகித்சர்மா இருவரும் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர். கடந்த போட்டிகளில் அவர்கள் இருவரது ஆட்டமும் மிக சிறப்பாக அமைந்தது.

நாளை இந்திய அணியுடனான ஆட்டத்தில் தொடக்கத்திலையே இந்திய அணியின் விக்கெட்களை கைப்பற்றினால் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிபெறும் என பெர்குசன் தெரிவித்துள்ளார்.


Advertisement