பாகிஸ்தான் ஆசியா கோப்பையை வெல்லும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்

பாகிஸ்தான் ஆசியா கோப்பையை வெல்லும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்



suni-gavaskar-has-told-pakistan-will-win-asia-cup-2018

1984 முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான 14ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. 

Asia cup 2018

இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள ஆசியக் கோப்பைக்கான தொடரில் அதிகபட்சமாக இந்தியா 6 முறையும் இலங்கை  ஐந்து முறையும் பாகிஸ்தான் இரண்டு முறையும் கோப்பையை வென்று உள்ளன.

இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வரும் 18ம் தேதி ஹாங்காங் அணியுடன் மோதுகிறது. இதற்கும் மறுநாளே இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது.

Asia cup 2018

இதற்கு முன்னர் இந்திய அணி பாகிஸ்தானுடன் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மோதியது இந்த போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது பாகிஸ்தான். 

Asia cup 2018

இந்த படுதோல்விக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் எதிர்கொள்ளும் ஆட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற இருப்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்த தொடர் குறித்து கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தான் கோப்பையை வெல்லும் என்று கூறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. 

Asia cup 2018

மேலும் இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்திய அணியின் கேப்டனாக  ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி இல்லாத இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.