சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற ஒற்றை பேட்ஸ்மேன்! தலைகுனிந்த சென்னை அணி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற ஒற்றை பேட்ஸ்மேன்! தலைகுனிந்த சென்னை அணி!



sun-risers-played-against-chennai-super-kings-ipl

2020 ஐபிஎல் 14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் வார்னர் 28 ரன்களும்,  பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 

 ஐதராபாத் அணியின் மனிஷ் பாண்டே 29 ஓட்டங்களும், அபிஷேக் 31 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக ஆடிய கார்க் 26 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 140 லிருந்து 150 ரன்கள்  வரை எடுப்பார்கள் என எதிர்பார்த்து வந்த நிலையில், கார்க்கின் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு164 ஓட்டங்களை பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

Hydrapad

165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இரண்டு ஓவரில் வெறும் நான்கு ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

டுபிளஸ்சி 22 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தோனி 36 பந்துகளில் 47 ரன்களும், கர்ரன் 5 பந்துகளில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். சென்னை அணி இறுதியில்  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.