விளையாட்டு

ஆசை தீர்ந்தது..! பிரபல சென்னை அணி வீரர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு.. வைரலாகும் ட்விட்

Summary:

பிரபல சென்னை அணி வீரர் சுதீப் தியாகி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிரபல சென்னை அணி வீரர் சுதீப் தியாகி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் சுதீப் தியாகி. தற்போது 33 வயதாகும் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற T20 போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அதனை அடுத்து பல்வேறு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் சுதீப் தியாகி.

மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் விளையாடியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தான் ஒய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், "எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த முகமது கைப், ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனவும், தோனி தலைமையிலான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியதற்கு அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்பதற்காகவே இந்த கடினமான முடிவை தான் எடுத்ததாகவும், ஒவ்வொரு வீரருக்கும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். என்னுடைய அந்த ஆசை நிறைவேறிவிட்டது" எனவும் சுதீப் தியாகி தெரிவித்துள்ளார்.


Advertisement