தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ராசியில்லாத சுப்மன் கில்.. மழையால் ஏற்பட்ட சோகத்தை ஈடு செய்த விருதுகள்..!
நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக இழந்தார் சுப்மன் கில்.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கில் ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து மிகவும் நேர்த்தியாக பேட்டிங் செய்து வந்தார். அரைசதம் கடந்த நிலையில் முதல்முறையாக மழை குறுக்கிட்டது. அதன்பின் தொடர்ந்த ஆட்டத்திலும் தனது பேட்டிங் திறமையை திறம்பட வெளிப்படுத்தினார் கில்.
36 ஓவர்கள் முடிவுற்ற போது 98 ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்யும் ஆவலில் சுப்மன் கில் இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் தடைபட்டதால் இந்திய அணியின் பேட்டிங் அத்துடன் முடிக்கப்பட்டது.
முதல் சதத்தை அடிக்கும் ஆவலில் இருந்த சுப்மன் கில்லின் ஆசை நிறைவேறாமல் போனது. அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதும் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரண்டு அரை சதங்களை அடித்த கில்லுக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது.