
subam gill introduced in odi
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் அறிமுக வீரர் சுபம் இந்த போட்டியில் களமிறங்குகிறார். தோனி மீண்டும் ஓய்வு.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று வென்று கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளிலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் கேப்டனாக களமிறங்கும் ரோகித் சர்மாவிற்கு இது 200வது ஒருநாள் போட்டி ஆகும்.
இந்த 2 போட்டிகளிலும் இருந்து இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்படுவதாகவும் அவருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனவே இந்த போட்டியில் கோலியின் இடத்தை நிரப்ப அறிமுக வீரர் சுபம் கில் களமிறக்கப்பட்டுள்ளார். 2018ல் நடைபெற்ற U-19 உலககோப்பையில் சிறப்பாக ஆடிய இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கோலி இவரைப் பற்றி கூறுகையில் 19 வயதில் கில் ஆடுவதில் 10 சதவிகிதம் கூட அந்த வயதில் நான் ஆடவில்லை என கூறியுள்ளார்.
மேலும் காயம் காரணமாக சென்ற ஆட்டத்தில் ஆடாத தோனிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவரது இடத்தில் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக மீண்டும் களமிறங்குகிறார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சாமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கலீல் அஹ்மத் இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
ரோகித் சர்மா(கே), தவான், சுபம் கில், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஷ்வர், குல்தீப் யாதவ், சாகல், கலீல் அஹமத்
Advertisement
Advertisement