இந்தியா விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தில் எகிறி வந்த விராட் கோலி.! இன்றைய ஆட்டத்தில் தட்டி தூக்கிய ஸ்டோக்ஸ்.!

Summary:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியும், 2-வது மூன்றாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று  2-1 என தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது.

இதனையடுத்து அகமதாபாத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களம் இறங்கினர். ஆண்டர்சன் தனக்காகவும் அணிக்காகவும் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே கில் LBW முறையில் அவுட் ஆனார். இந்தநிலையில் நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாராவும், ரோகித் சர்மாவும் நிதானமாக விளையாடி வந்தநிலையில் புஜாரா 17 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

நேற்றய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டோக்ஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதே கோபத்துடன் விராட் கோலியை ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகிவிட்டதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நிதானமாக ஆடிய ரகானே 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் ஓவரில் அவுட் ஆனார். தற்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. 


Advertisement